திருப்பூரில் இருந்து பிகார் மாநிலம் ஹஜிபூருக்கு பிற்பகலில் சிறப்பு ரயில்

Tiruppur Station Pics - Railway Enquiry

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திருப்பூரில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் இருந்து பிகார் மாநிலம் ஹஜிபூருக்கு இன்று(மே 12) பிற்பகல்ல சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இதில், 1,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் இருந்து 1,094 தொழிலாளர்கள் உள்பட 1,140 பேர் சிறப்பு ரயில் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.