காரைக்கால் - திருவாரூர் வழித்தடத்தில் மின்சார ரயில் என்ஜின் கொண்டு அதிவேக சோதனைநாடு முழுவதும் உள்ள ரயில்வே வழி தடங்களை மின் மயமாக்கும் பணியை இந்தியன் ரயில்வே துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

திருவாரூர் - காரைக்கால் தடத்தில் மின் மயமாக்கும் திட்டம் சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளது.


இந்நிலையில் தெற்குப் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் இன்று(மே 23) திருவாரூர் - காரைக்கால் வழி தடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பிற்பகலில் 75 கிலோமீட்டர் வேகத்தில் மின்சார இன்ஜின் மூலம் அதிவேக சோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக திருவாரூரிலிருந்து காரைக்காலுக்கு ரயிலில் தடத்தைச் சோதனை செய்தவாறு இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மின் பாதை பணியை ஆய்வு செய்தார்.


புகைப்படம் - வாட்ஸாப்பில் வந்தது