அதிகளவில் தொழிலாளர்கள் இருந்தால் தனி ரயில் : தமிழக அரசு அறிக்கை

TN govt rejects DMK's call on resolution against Centre | Deccan ...

கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக மத்திய அரசு சிராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கத்தை கடந்த ஒன்றாம் தேதி முதல் இயக்கி வருகிறது.

இந்நிலையில், தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புதல் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து கட்டணத்தை தொழிலாளர்களின் சொந்த மாநிலமோ, தனிநபரோ செலுத்தலாம். ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடு விளக்கங்களை தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வருவோர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். சோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்றாலும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பின் அவர்களுக்கு தனி ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை