பொது முடக்கத்தின் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் இருந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயங்குகிறது.

What to Bring on an Indian Train to Survive Those Long, Long Rides!

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவைகளில், புது தில்லியில் இருந்து மீண்டும் இயக்கப்படும், முதலாவது சிறப்பு ரயிலாக பிலாஸ்பூர் செல்லும் ரயில் எண் "02442 புது தில்லி - பிலாஸ்பூர்" சிறப்பு ரயில் டெல்லியில் இருந்து இன்று(மே 12) காலை புறப்பட்டுச் சென்றது. இதனை தொடர்ந்து மேலும் இரண்டு ரயில்கள் இன்று டெல்லியில் இருந்து பிற மாநிலங்களுக்கு புறப்படுகிறது.

இன்று புது தில்லியிலிருந்து மொத்தம் மூன்று ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு புறப்படுகின்றன. இந்த ரயில்களில் விவரங்கள் வருமாறு:

S.No.Train NoFromTo
12692புதுதில்லிபெங்களூரு
22424புதுதில்லிதிப்ரூகர்
32442புதுதில்லிபிலாஸ்பூர்

புதுதில்லி - பிலாஸ்பூர் சிறப்பு ரயிலில் 1177 பயணிகளும், புதுதில்லி - திப்ரூகர் சிறப்பு ரயிலில் 1122 பயணிகளும், புது தில்லி - பெங்களூரு சிறப்பு ரயிலில் 1162 பயணிகளும் பயணிக்கின்றனர்.

அதே சமயம் பிற மாநிலங்களில் இருந்து புதுதில்லிக்கு மொத்தம் ஐந்து சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன. இந்திய ரயில்வேயில் புலம்பெயந்தவர்களுக்காக இயக்கப்படும் 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் தவிர, கூடுதலாக இந்த சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.