புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக இயக்கப்படும் சிராமிக் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்

Non-stop, 1200 passengers: 10 things you should know about ...

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சிறப்பு ரயிலில் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்கள் குறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

சிராமிக் சிறப்பு ரயில்கள் 500 கி.மீ. தூரத்திற்கும் அதிகமாக குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு மட்டுமே இயக்கப்படும் ரயில்களாகும்.

இந்த ரயில்கள் இடையில் எந்த ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படாது(ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் மறுவதற்க்காக 500 கிலோமீட்டருக்கு ஒரு முறை நிற்கும்).

சுமார் 1200 பயணிகள் இதில் பயணம் செய்யலாம். 90 சதவீதத்திற்கும் குறையாத பயணிகள் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய வேண்டும்.

மாநில அரசு வழங்கும் தகவல் அடிப்படையில் ரயில்வே குறிப்பிட்ட இடத்திற்கான ரயில் டிக்கெட்டுக்களை வழங்கும்.

மாநில அதிகாரிகள் அந்த டிக்கட்டுக்களை பயணிகளிடம் வழங்கவேண்டும் மற்றும் மொத்த டிக்கெட்டுக்களுக்கான தொகையை ரயில்வேயிடம் வழங்க வேண்டும்.

ரயில் புறப்படும் நிலையத்தில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை மாநில அரசு வழங்க வேண்டும்.

12 மணிநேரத்திற்கும் அதிகமான பயணத்தில் ரயில்வே சார்பில் ஒரு முறை உணவு வழங்கப்படும்.

அனைத்து பயணிகளும் முககவசம் அணிவது கட்டாயமாகும். வழக்கமாக 72 நபர்கள் பயணிக்கும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 54 நபர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி.

பயணிகள் இறங்கும் ரயில் நிலையத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது, சோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். 
புதியது பழையவை