டெல்லி ⇄ சென்னை சிறப்பு ரயில் இரண்டு சேவைகள் மட்டுமே இயங்கும் : தமிழக அரசு

COVID-19 impact: More than one lakh tickets under East Coast ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக டெல்லியில் இருந்து பல்வேறு மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புது டெல்லி - சென்னை இடையே வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில்கள் இயங்கும் என ரயில்வேத்துறை அறிவித்தது. அதே சமயம் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டாம் என தமிழக முதல்வர் நேற்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

டெல்லி ⇢ சென்னை சிறப்பு ரயில், மே 13 மற்றும் 15ம் தேதிகளில் டெல்லியில் புறப்படும். சென்னை ⇢ டெல்லி சிறப்பு ரயில், மே 15 மற்றும் 17ம் தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும்.

இந்நிலையில் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டதால், மே 13 மற்றும் 15 ஆகிய 2 நாட்கள் மட்டும் டில்லியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த 2 ரயில்கள் தவிர வேறு எந்த ரயில் சேவைகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.