வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கு இணையத்தில் பதிவு செய்யவும்

return-to-tamilnadu News: Latest return-to-tamilnadu News ...

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 அன்று முதல் அமலில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக அனைத்து விதமான பயணிகள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் மீண்டும் தாயகம் திரும்புவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும் அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும் தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும் அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காகவும் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.


  • தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் Click here / இங்கு பதிவு செய்க 
  • Other state people in Tamil Nadu who wish to return to their home land Click Here