கொரோனா தொற்று: தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அலுவலகங்களை மூட உத்தரவு : தெற்கு ரயில்வே அதிரடி

Southern Railways revokes suspension of five staff in parcel theft ...

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த உதவி லோகோ பைலட் ஆக பணி புரிந்து வரும் நபருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதே போல தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் (பிசிஓஎம்) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கடந்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து சோதனை .செய்யப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏடிஆர்எம் பதவியில் பணிபுரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மூடுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.