தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வேயுடம் தமிழக அரசு கோரிக்கை

https://www.photojoiner.net/image/RC0rZeCQ

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன்காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 100 ஜோடி ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வேத்துறை சமீபத்தில் அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் இயங்கும் ரயில்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

இதற்கு மாநில அரசு ரயில் போக்குவரத்தை துவக்க அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில் சேவையை துவக்க தமிழக முதல்வர் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் 4 ஜோடி பகல் நேர ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியுள்ள்ளது. இந்த ரயில்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஜூன் 1ம் தேதி முதல் இயங்க வாய்ப்புள்ளது.

தெற்கு ரயில்வே பரிந்துரை செய்த 4 ஜோடி ரயில்கள் பின்வருமாறு ;


  • 12084/12083 கோயம்பத்தூர் ⇄ மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில்
  • 12635/12636 சென்னை எழும்பூர் ⇄ மதுரை "வைகை" அதிவிரைவு ரயிலை விழுப்புரம் ⇄ மதுரை இடையே இயக்க பரிந்துரை
  • 22627/22628 திருச்சி ⇄ திருவனந்தபுரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயிலை திருச்சி ⇄ நாகர்கோவில் இடையே இயக்க பரிந்துரை
  • 12679/12680 கோயம்பத்தூர் ⇄ சென்னை இன்டர்சிட்டி அதிவிரைவு ரயிலை கோயம்பத்தூர் ⇄ காட்பாடி இடையே இயக்க பரிந்துரை


வாரியம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் மேற்கொண்ட நான்கு ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயங்கும்.