ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் திறக்க அனுமதி

Can't allow monopoly in railway catering stalls: Madras HC - DTNext.in

ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் மற்றும் ஐ.ஆா்.சி.டி.சி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்:

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது இவற்றை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளபட வேண்டும். மேலும் சமைத்த உணவு விற்கவும் தற்போது அனுமதி வழங்கப்படுகிறது.

அதேவேளையில், அமா்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பாா்சல் உணவுகள் விற்றுக் கொள்ளலாம். கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆா்.சி.டி.சி தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை