சென்னைக்கு சிறப்பு ரயில்களில் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் !

Chennai Central station redevelopment bid opening deferred to June 30

நாடு முழுவதும் 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே கடந்த 12ம் தேதி முதல் இயக்கி வருகிறது. அதன்படி சென்னை - டெல்லி இடையே வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ராஜ்தானி சிறப்பு ரயில்களை இயக்கியது.

டெல்லியில் இருந்து கடந்த 14ம் தேதி வந்த சிறப்பு ரயிலில் 797 பேர் சென்னை வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், கடந்த 16 தேதி டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 757 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் தங்குவதற்கு பணம் செலுத்திய பயணிகளுக்கு மாநகராட்சி சார்பாக தனியார் விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக தங்க விரும்பிய 629 பயணிகள் அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் சென்னைக்கு சிறப்பு ரயில் வேண்டாம் என தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த சிறப்பு ரயில் இரண்டு முறை மட்டுமே இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை