“சொந்த ஊர் திரும்புதல்” திட்டத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் இந்திய ரயில்வே முயற்சிகள் தீவிரம்

Indian Railways to the rescue! Over 1 million passengers ...

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தொழிலாளர் தினமான மே  01-ல் இருந்து இந்திய ரயில்வே துறை “ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்” சேவையைத் தொடங்கியுள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பிறர்  பொது முடக்க நிலை காரணமாக பல பகுதிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மே 1 ஆம் தேதி அன்று தினமும் 4 ரயில்கள் என்று இந்திய ரயில்வே சேவை தொடங்கியது. 15 நாட்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. மே 14 ஆம் தேதி, மிகச் சிறந்த சாதனையாக மொத்தம் 145 ``ஷ்ராமிக் சிறப்பு'' ரயில்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து 2.10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தது இதுவை முதல்முறை ஆகும்.
புதியது பழையவை