காவலர்களுக்கு கொரோனா தொற்று : சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் மூடல்

Mandaveli Railway Station (MNDY) : Station Code, Time Table, Map ...

சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் தங்கி சுமார் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்த அறையில் தங்கியிருந்த 29 வயதான ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து 39 காவலர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் 4 ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலைய பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறி உள்ளது.
புதியது பழையவை