சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள்


நாளை(மே 12) முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன்(கோவா), மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர், பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று(மே 11) வெளியிட்டுள்ளார்.

பயணிகளுக்கான நெறிமுறைகள்

அதன்படி, இந்தப் சிறப்பு ரயில்களில் கொரோனா தொற்று பாதிக்கத்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

உறுதி செய்யப்பட்ட பயணசீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் ரயில் நிலையத்தில் நுழைந்ததில் இருந்து பயணம் முடியும் வரை கட்டாயமாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு போர்வை மற்றும் கம்பளிகள் வழங்கப்படமாட்டாது.

மேலும் பயணிகள் ரயில் நிலையத்தில் நுழையும் போதும், பெட்டியில் நுழையும் போதும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணசீட்டு நெறிமுறைகள்

இந்த சிறப்பு ரயில்களுக்கு ராஜ்தானி விரைவு ரயிலின் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கு 7 நாட்கள் முன் முன்பதிவு துவங்கும்.

பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பே ரயில் நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.

பயணிகள் தங்களுக்குத் தேவையான போர்வைகள், கம்பளி, உணவு, குடிநீர் போன்றவற்றை தாங்களே எடுத்து வர வேண்டும்.

இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணசீட்டை 24 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் 50 சதவிதம் கட்டணம் மட்டுமே திருப்பி அளிக்கப்படும்.