வெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.

Indian Railways to replace Shatabdi with its new semi high-speed ...
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது தொற்று பரவலால் பாதிக்கப்படாத மற்றும் அறிகுறிகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்திரிகர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டிற்கு 1,200 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது ரயில் கேரளாவின் எர்ணாகுளத்திலிருந்து மாலை 6 மணிக்கு ஒடிசாவில் உள்ள புவனேஷ்வருக்கு புறப்பட்டு உள்ளது. சுமார் 1,000 பேரைக் கொண்டு செல்லும் இந்த ரயிலானது புவனேஸ்வருக்கு சென்றடையும் வரை அதில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த இரண்டு இரயில்களைத் தொடர்ந்து பல மாநில அரசுகளிடமிருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை