ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் ஐ.ஆர்.சி.டி.சி சர்வர் பாதிப்பு : முன்பதிவு 6 மணி முதல் நடைபெறும் - ரயில்வே அமைச்சகம்

book train tickets in lockdown how to download IRCTC app and ...

பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக தொடங்கவுள்ளதாக நேற்று ரயில்வேத்துறை அறிவித்தது.
மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று(மே 11) மாலை 4 மணி முதல் துவங்கும் எனவும் ரயில்வேத்துறை அறிவித்திருந்தது.

முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன்(கோவா), மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர், பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சூழ்நிலையில் 4 மணி முதல் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் ஐ.ஆர்.சி.டி.சி முடங்கியது. இது தொழில்நுட்ப ரீதியாக கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஓரே சமயத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய பயன்படுத்தியதால் ஏற்பட்டதா என்று ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களுக்கான விவரம் இணையதளத்தில் பதிவேற்றப்படுவதாகவும், முன்பதிவு மாலை 6 மணி முதல் நடைபெறும் என ரயில்வேத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.