தமிழகத்திற்கு ரயில்களில் வந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று !

Coronavirus in India: India has so far avoided community ...

புலம்பெயர்ந்தவர்களுக்கு ஷர்மிக் சிறப்பு ரயில் மற்றும் டெல்லியில் இருந்து 15 வலி தடங்களில் ராஜ்தானி ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூன் 1ம் தேதி முதல் பல மாநிலங்களில் குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார். அந்த வகையில் தமிழகத்திக்கு வந்த சிறப்பு ரயில்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

கடந்த 14ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ராஜ்தானி சிறப்பு ரயிலில் பயணித்த 849 பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி டெல்லியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஷர்மிக் சிறப்பு ரயிலில் பயணித்த 1105 பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணித்த 172 பயணிகள் சோதனைக்கு உட்பட்டுள்ளனர்.

அதே போல கடந்த 19ம் தேதி புனேவில் இருந்து தென்காசிக்கு வந்த ஷர்மிக் சிறப்பு ரயிலில் பயணித்த 1090 பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணித்த 433 பயணிகள் சோதனைக்கு உட்பட்டுள்ளனர்.

https://www.photojoiner.net/image/fORXYU2z
புதியது பழையவை