25 நாட்களில் சிறப்பு ரயில்கள் மூலமாக 40 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

Indian Railways to operationalise 2600 more shramik special trains ...

பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், இதர நபர்கள் ஆகியோரின் நடமாட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ஆணையையடுத்து இந்திய ரயில்வே 01 மே 2020: முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்திருந்தது.

25 மே 2020 காலை 10 மணி வரை மொத்தம் 3060 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இயக்கப்பட்டன.. 40 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக தங்களது சொந்த ஊருக்குச் சென்றடைந்தனர்.

3060 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 2608 ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. 453 ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 24.5.2020 அன்று 237 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 3.1 லட்சம் பயணிகளுடன் ஓடிக்கொண்டிருந்தன.

இந்த 3060 ரயில்களும் பல்வேறு மாநிலங்களிலிருந்து புறப்பட்டன. இவற்றில் அதிக அளவிலான ரயில்கள் புறப்பட்ட முதல் 5 இடங்கள் குஜராத் (853 ரயில்கள்), மகாராஷ்டிரா (550 ரயில்கள்),, பஞ்சாப் ( 333 ரயில்கள்), உத்தரப் பிரதேசம் (221 ரயில்கள்), தில்லி (181 ரயில்கள்).

இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிறுத்தப்பட்டன. நிறுத்தப்பட்ட அதிக அளவிலான ரயில்கள் உள்ள முதல் ஐந்து மாநிலங்கள் - உத்திரப் பிரதேசம் (1245 ரயில்கள்), பீகார் (846 ரயில்கள்), ஜார்கண்ட் (123 ரயில்கள்) மத்தியப் பிரதேசம் (112 ரயில்கள்) ஒடிசா (73 ரயில்கள்).

 23/ 24 மே 2020 தேதிகளில் காணப்பட்ட ரயில் வழித்தட நெரிசல்கள் இப்போது இல்லை.

ரயில்கள் ஓடிய வழித்தடங்களில் மூன்றில் இரண்டு பங்கு ரயில்கள் பீகார் மற்றும் உத்திரப்பிரதேச வழித்தடங்களில் இருந்தன என்பதாலும், புறப்படும் இடத்திலும் சென்று சேரும் இடத்திலும் சுகாதார விதிமுறைகளை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டி இருந்ததால் ஏற்பட்ட தாமதத்தாலும், வழித்தடத்தில் நெரிசல் ஏற்பட்டது.. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்ததாலும், ரயில்கள் செல்வதற்கான வேறு சாத்தியமான வழித்தடங்களை கண்டறிந்ததாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தவிர கூடுதலாக, இந்திய ரயில்வே, புதுடில்லியை இணைக்கும் பதினைந்து சிறப்பு இணை  ரயில்களை இயக்கவுள்ளது. 1 ஜூன் 2020 முதல் அட்டவணைப்படியான மேலும் 200 ரயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது
புதியது பழையவை