கோயம்பத்தூர் ⇄ காட்பாடி இடையே ஜூன் 1ம் தேதி முதல் பகல் நேர இண்டர்சிட்டி சிறப்பு ரயில்


02680 கோயம்பத்தூர் ⇒ காட்பாடி சிறப்பு ரயில், கோவையில் இருந்து காலை 6:15 மணிக்கு புறப்பட்டு காலை 11:50மணிக்கு காட்பாடி வந்து சேரும்.

மறுமார்கத்தில் 02679 காட்பாடி ⇒ கோயம்பத்தூர் சிறப்பு ரயில், காட்பாடியில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு இரவு 10:15க்கு கோவை வந்து சேரும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கு கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலம் இன்று(மே 30) மாலை 4மணி முதல் முன்பதிவு மேற்கொள்ளலாம். இணையம் மூலமும் முன்பதிவு மேற்கொள்ளலாம்.

2680 ⇓ 2679 ⇑
06:15 AMகோயம்பத்தூர்10:15 PM
06:53/06:55திருப்பூர்21:03/21:05
07:40/07:45ஈரோடு20:20/20:25
08:32/08:35சேலம்19:17/19:20
10:18/10:20ஜோலார்பேட்டை17:28/17:30
11:50 AMகாட்பாடி04:20 PM

மார்ச் 21ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு தற்போது பணம் திருப்பி அளிக்கப்படவில்லை, எனவே முன்பதிவு மையங்களை பணம் திரும்ப பெறுவதற்கு தற்போது அணுக வேண்டாம் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இருதய நோய்  உள்ளவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிக அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அல்லது பயணத்தை தவிர்க்கலாம்

பயணத்தின் போது எந்த ஒரு அவசரத்திற்கும் உதவி எண்கள் 139 & 138 மூலம் தொடர்பு கொள்ள ரயில்வேத்துறை அறிவுறுத்தியுள்ளது.