மதுரை ⇄ விழுப்புரம் இடையே ஜூன் 1ம் தேதி முதல் பகல் நேர இண்டர்சிட்டி சிறப்பு ரயில்


02636 மதுரை ⇒ விழுப்புரம் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு பகல் 12:05க்கு விழுப்புரம் வந்து சேரும்.

மறுமார்கத்தில் 02635 விழுப்புரம் ⇒ மதுரை சிறப்பு ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9:20க்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கு மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலம் இன்று(மே 30) மாலை 4மணி முதல் முன்பதிவு மேற்கொள்ளலாம். இணையம் மூலமும் முன்பதிவு மேற்கொள்ளலாம்.

2636 ⇓ 2628 ⇑
07:00 AMமதுரை09:20 PM
07:58/08:00திண்டுக்கல்20:03/20:05
09:10/09:15திருச்சி18:35/18:40
10:09/10:10அரியலூர்17:24/17:25
12:05 PMவிழுப்புரம்04:00 PM

மார்ச் 21ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு தற்போது பணம் திருப்பி அளிக்கப்படவில்லை, எனவே முன்பதிவு மையங்களை பணம் திரும்ப பெறுவதற்கு தற்போது அணுக வேண்டாம் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இருதய நோய்  உள்ளவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிக அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அல்லது பயணத்தை தவிர்க்கலாம்.

பயணத்தின் போது எந்த ஒரு அவசரத்திற்கும் உதவி எண்கள் 139 & 138 மூலம் தொடர்பு கொள்ள ரயில்வேத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதியது பழையவை