02084 கோயம்பத்தூர் ⇒ மயிலாடுதுறை சிறப்பு ரயில், கோவையில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு பகல் 1:40மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்து சேரும்.

மறுமார்கத்தில் 02083 மயிலாடுதுறை ⇒ கோயம்பத்தூர் சிறப்பு ரயில், மாயவரத்தில் இருந்து பிற்பகல் 2:05 மணிக்கு புறப்பட்டு இரவு 9:15க்கு கோவை வந்து சேரும்.

செவ்வாய்க்கிழமை இந்த ரயிலின் சேவை கிடையாது.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கு கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலம் இன்று(மே 30) மாலை 4மணி முதல் முன்பதிவு மேற்கொள்ளலாம். இணையம் மூலமும் முன்பதிவு மேற்கொள்ளலாம்.

2084 ⇓ 2083 ⇑
07:10 AMகோயம்பத்தூர்09:15 PM
07:53/07:55திருப்பூர்20:03/20:05
08:37/08:40ஈரோடு19:17/19:20
09:28/09:30கரூர்18:13/18:15
11:05/11:15திருச்சி16:55/17:05
12:03/12:05தஞ்சாவூர்15:43/15:45
12:41/12:43கும்பகோணம்15:13/15:15
01:40 PMமயிலாடுதுறை02:50 PM

மார்ச் 21ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு தற்போது பணம் திருப்பி அளிக்கப்படவில்லை, எனவே முன்பதிவு மையங்களை பணம் திரும்ப பெறுவதற்கு தற்போது அணுக வேண்டாம் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இருதய நோய்  உள்ளவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிக அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அல்லது பயணத்தை தவிர்க்கலாம்

பயணத்தின் போது எந்த ஒரு அவசரத்திற்கும் உதவி எண்கள் 139 & 138 மூலம் தொடர்பு கொள்ள ரயில்வேத்துறை அறிவுறுத்தியுள்ளது.