19 தினங்களில் 1600 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கம் : 21.5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பினர்

Shramik Special trains to now run with full passenger capacity ...

புலம்பெயர்ந்தவர்களுக்கான ஷ்ரமிக் சிறப்பு ரயில்களோடு, 200 புதிய ரயில்களை ஜூன் 1, 2020 முதல் ரயில்வே இயக்கவுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ரயில்கள் குளிர்சாதன வசதி அல்லாதவையாக இருக்கும். இதற்கான பயணச்சீட்டுகள் இணையத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். எனவே பயணிகள் யாரும் ரயில் நிலையம் செல்ல வேண்டாம்.

வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் இருக்கம் இடத்துக்கு அருகேயுள்ள, முக்கிய வழித்தடத்துடன் இணைந்துள்ள ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறும் வகையில் ரயில்வே துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் கூடுதல் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே துறை முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் மே 19ம் தேதி வரை 21.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் 1600 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த மே 1ம் தேதி முதல் ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை