சொந்த ஊர்களுக்கு செல்ல 1.75 லட்சம் வெளிமாநிலத்தவர் பதிவு : ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

Indian Railways ticket prices set to be hiked! Delhi-Mumbai, Delhi ...

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே தங்கியுள்ள நிலையில், அவர்களை, அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மாநிலம்தோறும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் திரும்பிவர பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இங்கிருப்பவர்களை அனுப்பவும், அங்கிருப்பவர்களை அழைத்து வரவும் மாநிலவாரியாக ஒருங்கிணைப்புக்கு, தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகங்களுடன் பேசி இங்கிருந்தும், அந்தந்த மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.