ரயில் சேவை நின்றதால், வாழ்வாதாரமும் நின்னு போச்சு : 1.60 லட்சம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு

Catering on Bhubaneswar Rajdhani Express optional now - The ...

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றக் கூடிய ரயில் சேவையை நம்பியே நாடு முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 

ரயில்களில், தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கைகுட்டை, எழுதுபொருட்கள், வாசனை திரவியங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ரயில்களில் தினம்தோறும் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கின்ற சொற்ப வருவாயில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர்.

சிலர் தங்களின் வசதிக்காக, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற ஜங்ஷன் பகுதி ரயில் நிலையங்களுக்கு அருகில் வாடகை வீடு எடுத்து தங்கி, திருப்பதி, ஈரோடு, சேலம் பகுதிகளுக்கும் வியாபாரத்திற்காக ரயில்களில் சென்று வந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயிலையே பிரதானமாக நம்பியிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, வாழ்வாதாரமின்றி, கையில் பணம் இல்லாமல் குடும்பம் நடத்த அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்றி, வறுமையில் தவித்து வருகின்றனர்.

ஓடும் ரயிலில், வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டிருந்தோம். கொரோனாவால் ரயில்சேவை மட்டும் நிற்கவில்லை. எங்களது வாழ்வாதாரமும் தான் நின்னு போச்சு, இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் பலமுறை தொலைபேசியில் உதவிக்காக தொடர்பு கொண்டோம். ஆனால் இதுநாள் வரையில் எங்களுக்கு எந்த உதவியும் அவர் செய்யவில்லை.

நன்றி - தினகரன்

புதியது பழையவை