15 நாட்களில்(மே 15ம் தேதி நள்ளிரவு வரை) 1.4 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் திரும்பியுள்ளனர்.

Railway Guidelines Say Trains For Migrant Workers Will Run Only If ...

நாட்டின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்திய ரெயில்வே “ஷ்ரமிக் சிறப்பு” ரெயில்களை இயக்க முடிவெடுத்தது.

நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையில் 2020, மே 15 நள்ளிரவு வரை மொத்தமாக 1074 ஷ்ரமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.  கடந்த 15 நாட்களில் மட்டும் போக்குவரத்து வசதி இல்லாமல் சிக்கித்தவித்த 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் சென்றுள்ளனர்.

இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த எண்ணிக்கையானது வரும் நாட்களில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பயணிகள் அளவிற்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 1074 ஷ்ரமிக் சிறப்பு ரெயில்களும் ஆந்திரப்பிரதேசம், தில்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

இதே போன்று இந்த ஷ்ரமிக் சிறப்பு ரெயில்கள் ஆந்திரப்பிரதேசம். அசாம், பீகார், சட்டிஸ்கர், ஹிமாசலப்பிரதேசம். ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களுக்கும் போய்ச் சேர்ந்துள்ளன.