தண்டவாளத்தில் படுத்திருந்த 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ஏறியது !

ரயில் விபத்து
Credits - ANI

பல மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனினும் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கின்றனர்.


இந்த சூழ்நிலையில் இன்று காலை மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறி பெரும் விபத்து ஏற்பட்டது. காலியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் 14 பேர் பலியாகியுள்ளனர். கடுமையான காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தாங்கள் தங்கி இருக்கு இடத்திலிருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டால் அங்கிருந்து ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்று விடலாம் என ரயில் தண்டவாளத்திலே நடந்திருக்கிறார்கள். 45 கிலோ மீட்டர்கள் ரயில் பாதை வழியே சென்றவர்கள், இரவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில் வராது என்று தண்டவாளத்தில் படுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.