நாடு முழுவதும் மே 13ம் தேதி நிலவரப்படி 642 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கியுள்ளது.பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆன்மிக யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பல்வேறு இடங்களிலிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வசதியாக, இந்திய ரயில்வே, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் மே 13ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 642 ஷ்ராமிக் ரயில்களை இயக்கி உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக இயக்கப்பட்ட ரயில்களின் விவரம்

ஆந்திரப்பிரதேசம் (3) பீகார் (169),  சட்டீஸ்கர் (6),  இமாச்சல் பிரதேசம் (1) ஜம்மு காஷ்மீர் (3),  ஜார்கண்ட் (40),  கர்நாடகா (1),  மத்தியப்பிரதேசம் (53),  மகாராஷ்டிரா (3),  மணிப்பூர் (1),  மிசோரம் (1),  ஒடிசா (38),  ராஜஸ்தான் (8),  தமிழ்நாடு (1),  தெலுங்கானா (1),  திரிபுரா (1),   உத்திரப் பிரதேசம் (301),  உத்ரகண்ட் (4),  மேற்கு வங்காளம் (7)

இந்த ரயில்களில் ஏறுவதற்கு முன்னர் அனைத்து பயணிகளும், முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு இலவச உணவும், குடிநீரும் வழங்கப்படுகிறது.