நாடு முழுவதும் இன்று(மே 12) காலை 9:30 நிலவரப்படி 542 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கியுள்ளது : உத்தரப்பிரதேசத்திற்கு 221 ரயில், பீகாருக்கு 117 ரயில், தமிழகத்திற்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கம்.

No proposal so far to run 'Shramik Special' trains to Bengal ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆன்மிக யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த இதர பிரிவினருக்கு 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.

இந்நிலையில் இன்று(மே 12) காலை 9:30 நிலவரப்படி 524 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கியுள்ளது. இதில் 448 ரயில்கள் சேருமிடங்களை அடைந்துவிட்டது. இதர 94 ரயில்கள் பயணத்தில் உள்ளது.

மாநில வாரியாக இயக்கப்பட்ட 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் விவரம்.

ஆந்திரப்பிரதேசம் (1), பீகார் (117), சத்தீஸ்கர் (1), ஹிமாச்சல் பிரதேசம் (1), ஜார்கண்ட் (27), கர்நாடகா (1), மத்தியப்பிரதேசம் (38), மகாராஷ்டிரா (3), ஒடிஷா (29), ராஜஸ்தான் (4), தமிழ்நாடு (1), தெலங்கானா (2), உத்திரப்பிரதேசம் (221) மற்றும்  மேற்கு வங்கம் (2)
திருச்சிராப்பள்ளி, டிட்லகர், பரவுனி, கண்ட்வா, ஜகன்நாத்பூர், குர்தா ரோடு, பிரக்யாராஜ், சப்பரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி, தர்பங்கா, கோரக்பூர், லக்னோ, ஜாவ்ன்பூர், ஹாட்டியா, பஸ்டி, காடிஹார், தனப்பூர், முசாபர்பூர், சஹஸ்ரா ஆகிய இடங்களுக்கு புலம்பெயர்ந்தோரை இந்த ரயில்கள் ஏற்றி சென்றுள்ளது.

தமிழகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. அதே சமயம் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.