மே 12ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள் : முதற்கட்டமாக டெல்லி - சென்னை/திருவனந்தபுரம் உள்பட 15 தடங்களில் இயக்கம்

Google celebrates Indian Railways' history and heritage — Quartz India

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவை உள்பட அனைத்து பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள்(மே 12) முதல் சிறப்பு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(மே 11) மாலை 4 மணிக்கு துவங்கும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன்(கோவா), மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர், பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(மே 11) மாலை 4 மணிக்கு துவங்குகிறது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கொரோனா தொற்று உள்ளவர்கள் பயணிக்க முடியாது.

ஐஆர்சிடிசி இணைய தளத்தில் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு மேற்கொள்ள முடியும்.

முன்பதிவு செய்தவர்களை தவிர மற்ற நபர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

புதியது பழையவை