நாடு முழுவதும் இன்று(மே 10) பிற்பகல் 3மணி வரை 366 “ஷ்ரமிக்’’ சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கியுள்ளது.

20 shramik special train will arrive 08 may friday bihar from ...

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தவித்து வந்த இதர நபர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே ‘’ஷ்ரமிக்‘’ சிறப்பு ரயில்களை இயக்க வருகிறது.

அதன்படி இன்று(மே 10) பிற்பகல் 3 மணி வரை, 366 "ஷ்ரமிக் சிறப்பு" ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டுள்ளது. இவற்றில் 287 ரயில்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றடைந்த்துள்ளது. எஞ்சியுள்ள 79 ரயில்கள் பயணத்தில் உள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில், தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து, சுமார் 1200 பயணிகள் வரை பயணம் செய்கின்றனர்.

பயணத்திற்கு முன்பாக, பயணிகளுக்கு முறையான பரிசோதனை செய்யப்படுகிறது.

பயணத்தின் போது பயணிகளுக்கு, இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.