பயணிகள் கவனத்திற்கு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் வழியாக சங்கமித்ரா ரயில் ஜூன் 1ம் தேதி முதல் பயணிக்கவுள்ளது : இதற்கான முன்பதிவு நடைபெறுகிறதுநாடு முழுவதும் சிக்கியுள்ள புலம் பெயர்ந்தவர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு ஷர்மிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு ராஜ்தானி சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 100 ஜோடி ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தில் இருந்து புறப்படும் எந்த ரயில் சேவையும் குறிப்பிடவில்லை. ஆனால் தமிழகம் வழியாக செல்லும் ஒரு ரயில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

02295/02296 பெங்களூர் ⇄ தனபூர் "சங்கமித்ரா" ரயில். இந்த ரயில் தமிழகத்தில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

ஜூன் 1ம் தேதி முதல்

KSR BENGALURU9:00
JOLARPETTAI11:2811:30
KATPADI JN12:3512:40
ARAKKONAM JN13:3313:35
TIRUVALLUR14:0814:09
MGR CHENNAI CTL15:1515:40

ஜூன் 3ம் தேதி முதல்
MGR CHENNAI CTL13:3013:55
ARAKKONAM JN14:5314:55
KATPADI JN15:4815:50
JOLARPETTAI17:2517:30
KSR BENGALURU20:20
புதியது பழையவை