நாடு முழுவதும் புலம்பெயந்தவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் இதுவரை 115 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

Image

பொதுமுடக்கம் காரணமாக அனைத்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்து பணியாற்றி வந்தவர்கள் அனைவரும் அந்தந்த ஊர்களில் தங்கும் நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாத காரணத்தால் தங்கள் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மே 1ஆம் தேதி முதல் இதுவரை 115 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. ரயில்கள் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 24 பெட்டிகளை கொண்ட ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் உள்ள போதிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 54 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் காட்பாடியில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு நேற்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
குஜராத்தில் இருந்து மட்டும் 35 ரயில்களும், கேரளாவில் இருந்து 11 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் சென்றுள்ளன. பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வேயும், மீதி 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு கூறி உள்ளது.