குறைந்த விலையில் சுவாச கருவி : இந்தியன் ரயில்வே அசத்தல்

Isolation coaches have been prepared by the Indian Railways to fight the Coronavirus Pandemic, at Rajendra Nagar Terminal railway station in Patna on Saturday.  (ANI )

மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை போக்கும் வகையில் குறைந்த விலை சுவாசக் கருவியை (வென்டிலேட்டா்) கபுா்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கபுா்தலா ரயில்பெட்டித் தொழிற்சாலையின் பொது மேலாளா் ரவீந்தா் குப்தா கூறியதாவது: கம்ப்ரஸா் இல்லாத வென்டிலேட்டரை உருவாக்க ரூ. 10,000 வரை செலவாகும். ஐசிஎம்ஆா் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் குறைந்த செலவில் தினந்தோறும் 100 வென்டிலேட்டா்களை உற்பத்தி செய்ய இயலும். வழக்கமான வென்டிலேட்டரின் விலையை விட மிகக் குறைவாக இதன் விலை இருக்கும் என்றாா்.

மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐசிஎம்ஆா்)-இன் ஒப்புதலை பெற காத்திருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.