சென்னை யானைக்கவுனி பாலம் இடிக்கப்படுகிறது : சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு பார்சல் ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கம்

Corporation to spend Rs 26.45 crore on new Elephant Gate bridge ...

சென்னை வால்டாக்ஸ் ரோடு, பெரியமேடு பகுதிகளை இணைக்கும் விதமான யானைக்கவுனி பாலம் பழுதடைந்த காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டில் மூடப்பட்டது.

யானைக்கவுனி பாலத்தின் கீழே ஏராளமான எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்கள் சென்று வருவதாலும் 230 கிலோவாட் மின்சார கேபிள் லைன் செல்வதாலும் இந்த பாலத்தை இடித்து அகற்றுவதற்கு மின்சாரத் துறை, ரெயில்வே துறை ஒப்புதல் பெற காலதாமதம் ஏற்பட்டது.

சமீபத்தில் யானைக்கவுனி பாலத்தை இடித்து அகற்றி அங்கு புதிய பாலம் கட்ட ரெயில்வே துறையும் அதற்கான பணியில் ரெயில்வே மாநநகராட்சி, மின்சாரத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யானைக்கவுனி பாலத்தை இடிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

Elephant Gate ROB tells a tale of apathy as proposals remain on ...

பார்சல் ரயில் சேவையில் மாற்றம்

இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் பார்சல் சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி 00653/00654 சென்னை சென்ட்ரல் - சோரனுர் - சென்னை சென்ட்ரல், 00646/00647 சென்னை சென்ட்ரல் - புது டெல்லி - சென்னை சென்ட்ரல் மற்றும் 00116/00115 சென்னை சென்ட்ரல் - மும்பை - சென்னை சென்ட்ரல் ஆகிய பார்சல் சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும், 00615/00616 பெங்களூர் - ஹௌரா - பெங்களூர் மற்றும் 00618/00608 திமபூர் - பெங்களூர் - திமபூர் பார்சல் சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாலத்தின் சிறப்பம்சம்
  • தற்போது உள்ள 50 மீட்டர் நீளம் உள்ள பாலத்துக்கு பதிலாக 150 மீட்டர் நீளத்துக்கு புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
  • இதன்காரணமாக கூடுதல் ரயில் தடம் அமைய வாய்ப்புள்ளது.
  • தடம் கிடைக்காமல், காத்திருக்கும் ரயில்கள் சீராக இயங்க வாய்ப்பு.
  • சில ரயில்களின் பயண நேரம் 10-20 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்பு.
  • சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பணிமனை செல்லும் ரயில்கள் துரிதமாக போய் சேரும். மறுமார்கத்திலும் துரிதமாக வந்து சேரும்.
புதியது பழையவை