ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக்கூடாது : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Each cabin of the coach has been converted into an independent isolation ward.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க இரயில் பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகிறது. இதுவரை சுமார் 3000 ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக மாற்றுவதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டை சேர்ந்த முனிசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் "கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேடர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வைக்க ரயில் பெட்டிகளில் வசதிகள் இல்லாததால், ரயில் பெட்டிகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்ற உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் போதிய சுகாதாரம் இல்லாமலும், தேவையான் மின்சார வசதிகள் இல்லாமலும் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.