கொவிட் தொற்றுநோயின் பரவல் காரணமாக சரக்குப் போக்குவரத்திற்கான சலுகைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Railway clients get approval to buy their own freight rakes ...

கொவிட் -19 தொற்றுநோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை வழங்குவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக செல்லாமல் மின்னணு முறையில் தங்கள் சரக்குத் தேவைகள் குறித்து பதிவு செய்யமுடியும். இதனால் இந்த செயல்பாடு விரைவாக முடிக்கப்படுவதுடன், வெளிப்படையான செயல்முறையாகவும் இருக்கும்.

காலம் தாழ்த்தல் கட்டணம் (Demurrage charges), தங்கும் கட்டணம் (Wharfage charges), (Stacking charges), மற்றும் உறுதிப்படுத்தப்படாத கட்டணங்கள் (Stabling charges) ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட இலவச நேரம் காலாவதியான பிறகு வசூலிக்கப்படும்.

மின்னணு மூலம் கோரிக்கையைப் பதிவு செய்யும் (Electronic registration of demand e-RD) முறையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் நேரடியாகச் செல்லாமல் தங்கள் கோரிக்கைகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது. இது எளிமையானது, வசதியானது, விரைவானது மற்றும் வெளிப்படையானது.

முடிந்தவரை, வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட ரயில்வே பதிவு சீட்டை (eT-RR)  தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், இதனால் அசல் சீட்டை, சரக்குகள் சென்று சேரும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

இந்திய ரயில்வே நீண்ட காலமாக இந்தத் தேவையை உணர்ந்துள்ளதுடன் சரக்குப் போக்குவரத்தை பல்வகைப்படுத்த பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதாவது, நிலக்கரி, இரும்புத்தாது போன்ற மொத்தப் பொருள்களுடன், வழக்கமான சரக்குப் போக்குவரத்திற்கும் அதிகமான சேவைகளையும் செயல்படுத்தும்.