அடுத்த வாரம் துவங்குகிறது வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்

CMRL - WELCOME TO CHENNAI METRO RAIL

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் இடையே மெட்ரோ ரயில் வழித்தட முதல்கட்ட நீட்டிப்பு திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. மொத்தம் 9 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் சா் தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையாா்பேட்டை உள்பட 8 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இதற்கிடையில், ஊரடங்கு அமலானதால், மெட்ரோ ரயில்கள் இயக்கமும், கட்டுமானப் பணிகளும் திடீரென நிறுத்தப்பட்டன. வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு, கட்டுமானப் பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களிடம் பணிகளை தொடங்க தயாராக இருக்க மெட்ரோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
புதியது பழையவை