
இதனை தொடர்ந்து பார்சல் சிறப்பு ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே நீடித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;
1/3. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் பார்சல் சிறப்பு ரயில்(ஏப்ரல் 25ம் தேதி வரை)
சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்கத்தில் நாகர்கோவிலில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து மாலை 6மணிக்கு புறப்பட்டு, இரண்டாம் நாள் காலை 9:30க்கு டெல்லி சென்றடையும். மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து மாலை 6மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் காலை 8:30க்கு சென்னை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் விஜயவாடா, பல்ஹர்ஷா, நாக்பூர், இடார்சி, போபால், பினா, ஜான்சி, குவாலியர் மற்றும் ஆக்ரா கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:30க்கு கோவை வந்து சேரும். மறுமார்கத்தில் கோவையில் இருந்து அதிகாலை 4:30க்கு புறப்பட்டு, மாலை 4:45மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.