ரயில்சேவையை துவங்கும் திட்டம் தற்போது இல்லை - ரயில்வேதுறை விளக்கம்

Piyush Goyal announces 50% reservation for women in upcoming RPF ...

இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

மேலும் ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மேற்கொள்ளும் பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் "பல ஊடகங்களில் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுவது குறித்து ரயில்கள் விவரங்கள், நேரங்களுடன் செய்திகள் வெளியாகின. பயணிகள் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து வெளியான செய்திகள் தொடர்பான திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த முடிவுகள் எடுக்கப்பட்டப் பிறகு முறையாக அறிவிக்கப்படும்" என இந்தியன் ரயில்வே துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.