94 லட்சம் ரயில் பயணச்சீட்டுக்கள் ரத்து : 1490 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது ரயில்வேத்துறை

Indian Railways launches new platform Rail Drishti

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 22ம் தேதியில் இருந்தே பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் முழு ஊரடங்கால் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் மார்ச் 22 - ஏப்ரல் 14 காலக்கட்டத்திதில் பயணம் செய்ய 55 லட்சம் பயணச்சீட்டுக்களை எடுத்தவர்களுக்கு 830 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் 39 லட்சம் பயணச்சீட்டுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு 660 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இணையத்தில் முன்பதிவு செய்தோருக்கு அவர்களின் கணக்கில் தானாகவே பணம் செலுத்தப்படும். முன்பதிவு மையத்தில் பயனச்சீட்டு பெற்றவர்கள் ஜூலை 31ஆம் தேதி வரை கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்.