573 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம்

Outbreak of coronavirus disease (COVID-19) on the outskirts of ...

தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள பல்வேறு பணிமனைகளில் மொத்தம் 573 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன.

உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதே சமயம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 573 ரயில் பெட்டிகள், கரோனா தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் பேசின்பாலம் கோச்சிங் யாா்டில் 33 பெட்டிகள், எழும்பூா் கோச்சிங் யாா்டில் 15, தாம்பரம் கோச்சிங் யாா்டில் 7 என்று மொத்தம் 55 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாாடுகளாக மாற்றப்படவுள்ளன.

நாடு முழுவதும் முதல்கட்டமாக, 5,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றும் பணிகள் தொடங்கிவிட்டன. இதன்மூலம், 80,000 படுக்கைகள் கிடைக்கும். இந்தப் படுக்கைகள், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன.