மே 3ம் தேதி வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளுக்கு முழு பணம் திரும்பி அளிக்கப்படும் : ரயில்வே துறை

Konkan Railway to go fully electric by 2021 - news

மே மாதம் 3-ம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், அதுவரை ரயில் சேவையும் இருக்காது. சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம் போல இயங்கும்.

நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால், மே மாதம் 3-ம்  தேதி வரையிலான காலக்கட்டத்தில் முன்பதிவு செய்திருக்கும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

அதே சமயம், மே 3ம் தேதிக்கு பிறகான நாட்களுக்கு இ-டிக்கெட் உள்பட ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இணையம் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் வசதி மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.