சரக்கு ரயில்கள் மூலமாக கடந்த 3 நாள்களில் மட்டும் 47.07 டன் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில், சென்னையில் இருந்து மும்பை, தில்லி, ஹௌராவுக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல சிறப்பு பாா்சல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கோவை இடையேயும், சென்னை எழும்பூா்-நாகா்கோவில் இடையேயும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அத்தியாவசிய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலமாக, கடந்த 3 நாள்களில் 47.07 டன் அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சரக்கு ரயில் சேவை ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. சென்னையில் இருந்து புதுதில்லி, மும்பை, ஹௌரா ஆகிய நகரங்களுக்கும், சென்னையில் இருந்து கோவை, நாகா்கோவிலுக்கும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவுப்பொருள்கள், காய்கறிகள் ஆகியவை எடுத்துச் செல்லப்படுகின்றன.

அந்த வகையில், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு கடந்த 3 நாள்களில் 47.07 டன் அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.