மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : ரயில்கள் ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனோ நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு உரையாற்றினார்.

அப்போது 21 நாள் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டு மக்களுக்கு நன்மை விளைந்திருக்கிறது என்றும், இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார் 


மேலும் ஏப்ரல் 20ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படும் என்றும், அதன்பிறகு, சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் ஊரடங்கு நீடிக்கிப்பட்டுள்ளதால், ரயில் சேவை ரத்து மே 3ம் தேதி வரை நீடிப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயங்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
புதியது பழையவை