இந்திய ரயில்வே: ஏப்ரல் 22 அன்று 112க்கும் அதிகமான அடுக்குகள் மற்றும் 3.13 லட்சம் டன்களுக்கும் அதிகமான உணவுதானியங்கள் ஏற்றப்பட்டன

Indian Railways prunes Board by 25%, cuts down strength from 200 ...

கொவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கத்தின் போது, உணவு தானியம் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கிடைத்தலை உறுதி செய்யும் தனது முயற்சியை, சரக்கு சேவைகளின் மூலம் இந்திய ரயில்வே தொடர்கிறது.

அனைத்து இந்திய வீடுகளில் உள்ள சமையலறைகள் இயல்பாக செயல்படுவதை உறுதி செய்ய, 112 அடுக்குகளில் 3.13 லட்சம் டன் உணவு தானியங்கள் 22 ஏப்ரல் 2020 அன்று ஏற்றப்பட்டன. ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து  22ம் தேதி  வரையிலான பொது முடக்க காலத்தில், மொத்தம் 4.58 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் ஏற்றப்பட்டன.