இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி இன்றுடன் 167 ஆண்டுகள் ஆகிறது : முதலாவது ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.ரயில்வே வரலாற்று ஆசிரியரான ராஜேந்திர பி. அகலேகர் எழுதிய 'ஹால்ட் ஸ்டேஷன் இந்தியா' என்ற புத்தகம் அந்த காலத்தின் மனநிலையைப் பற்றி நமக்குச் சொல்கிறது.


இந்தியாவில் ரயில்வே அறிமுகம் நவீன இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ரயில்

1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பொரிபேண்டர் மற்றும் தானே 32 கி.மீ ரயில் பயணத்தை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தினர். இந்த ரயில் மூலம், இந்திய பொருளாதாரம் சக்கரங்களும் உருள அரம்பித்தன.

லார்ட் பால்க்லாண்ட் வருகை

பயணிகள் போக்குவரத்துக்கான முதல் ரயில் இஞ்சின், மும்பை துறைமுகத்தில் வந்து 1852-ல் இறங்கியது. இந்த இஞ்சினுக்கு அப்போதைய பாம்பே கவர்னரின் பெயர் சூட்டப்பட்டது.

இந்த இஞ்சின் மும்பை துறைமுகத்திற்கு வந்தபோது, 200 தொழிலாளர்களால் சாலைகளில் இறக்கப்பட்டது. இந்த புதுமையை காண, மும்பை பைகுல்லா பகுதியில் மக்கள் கூடினர்.

பரவிய புரளிகள்

இந்த இஞ்சினால் எப்படி வேகமாக செல்ல முடியும்? திய அல்லது தெய்வீக சக்தி இதில் இருக்கிறது. தீய சக்தி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என மக்கள் மத்தியில் புரளிகள் கிளம்பின.

இந்த ரயில் இஞ்சின்களுக்கு சக்தி கொடுக்க, ஒரு குழந்தையையும், இளம் தம்பதியையும் பலி கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஆட்களை தேடுவதாகவும் புரளிகள் வந்தன.

ஒருவர் ரயிலில் பயணித்தால், அவரது வாழ்காலம் குறையும் எனவும் அப்போது மக்கள் நம்பியிருந்தனர்.

முதல் பயணம்


ரயில்

ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில், பாம்பே கவர்னரின் மனைவியான லேடி பால்க்லாண்ட் ரயிலில் ஏறினார். பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள், பணக்காரர்கள், என 400 விருந்தினர்கள் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்.

சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பொரிபேண்டர் மற்றும் தானே இடையே பயணிக்க 57 நிமிடங்கள் ஆனது. 165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம் தான் எடுத்து கொள்கிறது.

நன்றி பிபிசி - தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்.வரலாற்று குறிப்புகள் • இரயில் போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் 1832-ல் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 • இந்தியாவில் முதல் ரயில் 1837 இல் செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டை பாலம் வரை ஓடியது. இது ரெட் ஹில் ரெயில்வே என்று அழைக்கப்பட்டது, மேலும் வில்லியம் ஏவரி தயாரித்த ரோட்டரி நீராவி என்ஜினியரைப் பயன்படுத்தியது. இந்த இரயில்வே சர் ஆர்தர் கோட்டனால் கட்டப்பட்டது மற்றும் சென்னை நகரத்தில் சாலை-கட்டுமான பணிக்கான கிரானைட் கற்களை கொண்டுசெல்ல முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.

 • 1844-ல் அப்போதைய கவர்னர்-ஜெனரலான ஹார்டிங்கே பிரபு என்பவர் தனியார் இரயில் போக்குவரத்தினை தொடங்க அனுமதித்தார். இரண்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பனியானது அவற்றுக்கு உதவக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆங்கிலேய முதலீட்டாளர்களின் ஈடுபாட்டினால் சில ஆண்டுகளிலேயே நிறைய இரயில் நிறுவனங்கள் தோன்றின.

 • 1845 ஆம் ஆண்டில், கோதாவரி மீது அணை கட்டுவதற்கு கற்கள் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது ராஜமுந்திரி இல் தவுலேஸ்வரம் கோடாரிய அணை கட்டடம் இரயில்வே கட்டப்பட்டது.

 • 1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது ரூர்கி, ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினியால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது ஒரு நீர்வழி (பாலம்) நீர்வழங்கல் கட்டுமானத்திற்கான கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

 • இந்தியாவின் முதல் பயணிகள் இரயில், 16 ஏப்ரல் 1853 அன்று மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது.[5] அப்பாதையின் நீளம் 34 கிலோ மீட்டர்களாகும்[6]. ஆங்கில அரசு, தனியார் இரயில் போக்குவரத்தினை வணிக ரீதியாக ஊக்குவித்ததன் காரணமாக நிறைய நிறுவனங்கள் துவங்கப்பட்டன. திட்டம் நிறைவடைந்த பின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அது வரும். எனினும் நிர்வாகத்தினை தனியாரே நடத்தினர்.

 • 1870ல் Great Indian Peninsular Railwayயின் வலையமைப்பு.

 • 1880-ஆம் ஆண்டு வாக்கில் இந்த வலையமைப்பானது சுமார் 14,500 கி.மீ. நீளம் கொண்டிருந்தது. இவற்றில் பெரும்பகுதியானது நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றிலிருந்து நாட்டின் உட்பகுதியை இணைத்தது. 1895-ல் இருந்து இந்தியா இரயில் எஞ்சின்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. மேலும் 1896-ல் உகாண்டா இரயில்வேயினை தொடங்க இந்தியா பொறியாளர்களையும் இரயில் எஞ்சின்களையும் அனுப்பியது.

 • தற்போதுள்ள ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன்பிருந்த இராச்சியங்கள் தங்களுக்கென இரயில் அமைப்புகளை ஆரம்பித்தன.

 • 1901-ம் ஆண்டு இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது எனினும் அதனுடைய அதிகாரங்கள் வைசிராய் கர்சன் பிரபுவிடமே இருந்தன. இந்த இரயில்வே வாரியம் அரசின் வணிக மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கியது. இதில் மூன்று உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய இரயில்வே ஊழியர் (தலைவர்), இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இரயில்வே மேலாளர், மற்றும் ஒரு இரயில்வே நிறுவனத்தின் முகவர் ஆகியோர் அவர்கள். வரலாற்றில் முதன்முறையாக இரயில்வே லாபம் ஈட்டியது.

 • 1907-ம் ஆண்டு ஏறத்தாழ அனைத்து இரயில் நிறுவனங்களும் அரசினால் கையகப்படுத்தப் பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு மின்சார இரயில் அறிமுகப்படுத்தப் பட்டது. முதல் உலகப்போரின் காரணமாக ஆங்கில அரசு இந்தியாவிற்கு வெளியில் இரயில்வேயினை இயக்கியது. இதனால் போரின் முடிவில் இரயில்வே மோசமான நிலையில் இயங்கியது. இதனால் 1920-ல் அரசு, இரயில்வே நிதியினையும் அரசின் மற்ற வருவாயினையும் தனியாகப் பிரித்தது.

 • 1953ல் இந்திய இரயில்வேயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல் தலை

 • இரண்டாம் உலகப்போரின் போது இரயில்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டன. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்த போது இரயில்வேயின் பெரும்பகுதி, அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமானது. முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 32 இரயில் அமைப்புகள் உட்பட மொத்தம் 42 இரயில் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கு இந்திய இரயில்வே என்று பெயரிடப்பட்டது.

 • 1951-ல் இரயில்வே அமைப்பு முறை கைவிடப்பட்டு அவை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்திய இரயில்வேயில் 1952-இல் மொத்தம் 6 மண்டலங்கள் இருந்தன. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இரயில் இயந்திரங்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.சில சுவாரஸ்யமான தகவல்கள்

 • ஆசியாவின் 2-வது பெரிய ரயில்வே . உலகின் 4-வது பெரிய ரயில்வே
 • இந்தியாவிலேயே , அதிக நில உடைமை கொண்ட அமைப்பு ரயில்வே துறையாகும்
 • மும்பை-தானே , 1853ல் டல்ஹெவுசியால் முதன்முதலில் தொடங்கப்பட்டது
 • ஹௌரா – ராணிகஞ்ச் , 1854ல் இரண்டாம் ரயில் போக்குவரத்து
 • சென்னை –ராணிப்பேட்டை, 1856 மூன்றாம் ரயில் போக்குவரத்து.
 • முதல் மின்சார ரயில் , டெக்கான் குயின் , 1929
 • ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அமைந்துள்ள இடம் , அலகாபாத்
 • ரயில்வே பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம் , பரோடா
 • இந்தியாவின் அதிவிரைவு ரயில் , டெல்லி - ஆக்ரா கட்டிமான் எக்ஸ்பிரஸ் (160 KMPH)
 • மிகநீளமான ரயில் பாதை திப்ரூகர்(அசாம்) – கன்னியாகுமரி(தமிழ்நாடு) இடையே 4286 கி.மீ தூரம் பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் .
 • 2-வது நீளமான ரயில்பாதை கத்ரா(ஜம்மு) - கன்னியாகுமரி(தமிழ்நாடு) இடையே 3726 கி.மீ தூரம் ஹிம்சாகர் ஹிம்சாவர் எக்ஸ்பிரஸ் 
 • முதல் மெட்ரோ ரயில் , கொல்கத்தா (1984)
புதியது பழையவை