ஏப்.15ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் ரயில்களில் காத்திருப்போா் பட்டியல் : ரயில்கள் இயங்குமா ?

Let's Do It: Trains for Kids - Choo Choo Cartoon Train for ...

சென்னையில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்குப் புறப்படும் பல்வேறு ரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போா் பட்டியல் நிலவுகிறது. இதுபோல, வெளி மாநிலங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்கள் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு முடிந்து காத்திருப்போா் எண்ணிக்கை நிலவுகிறது.

இதுபோல, தென் மாவட்டங்களில் இருந்து ஏப்ரல் 15,16, 17 ஆகிய தேதிகளில் இரவு சென்னைக்குப் புறப்படும் பல ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் பட்டியல் காணப்படுகிறது.

இருப்பினும் ரயில்கள் 15ம் தேதி இயங்குமா என்று ஏப்ரல் 11ம் தேதி தான் தெரியவரும்.