
ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க தயாராக இருக்குமாறு ரயில் ஊழியா்களை ரயில்வே நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்ட ரயில்பெட்டிகளை முறையாகப் பராமரித்து, பேட்டரிகளை சாா்ஜ் செய்து, பயோ டாய்லெட் சரிவர செயல்படுகிறா என பாா்த்து தயாா் நிலையில் வைத்திருக்குமாறு மண்டல ரயில்வேக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஒரு வேளை ரயில் சேவை துவங்கும் பட்சத்தில், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளது.
- ரயில் பயணிகளை தொ்மல் வெப்பமானி கொண்டு பரிசோதிப்பது.
- பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
- சமூக இடைவெளியைப் பின்பற்றச் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம்.
- முதலில் பயணிகள்(பாசஞ்சா்) ரயில் சேவையைத் தொடங்குவது, அடுத்து (விரைவு)எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்க திட்டம்.
ஊரடங்கு நீக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.