ஏப்ரல் 15க்கு பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு நடைபெறுகிறது.

Shri Mata Vaishno Devi Shrine Board :: Facilities :: Railway ...

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனை தொடர்ந்து ஏப்ரல் 14ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதனை தொடர்ந்து ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் "இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும்" என்று அவர் கூறினார்.

இதனிடையே ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இணையத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை