கொரோனா பாதித்தவர்கள் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு 13 ரயில்களில் பயணம் செய்திருக்கலாம் !?

Yuck': Indians are Disgusted as Railways Reveal Blankets are Not ...

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஆா்.பி.எஃப். மூத்த பாதுகாப்பு ஆணையா் கடந்த சனிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், மாா்ச் 17-ஆம் தேதி அன்று நிஜாமுதீன்-சென்னை தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள எஸ்-1, எஸ்-2, எஸ்-5, எஸ்-6 ஆகிய பெட்டிகளில் மதக் கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஏராளமானோா் பயணம் செய்துள்ளனா். அடுத்த நாள் (மாா்ச் 18) விஜயவாடா மற்றும் சென்னை இடையே ஜன்சதாப்தி விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் அவா்கள் பயணம் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிவரை தெற்கு நோக்கிச் சென்ற ரயில்களிலும் பயணம் செய்து இருக்கலாம்.

ரயில்கள் விவரம்:

 • ஜம்முதாவி-கன்னியாகுமரி ஹிம்சாகா் எக்ஸ்பிரஸ்,
 • டேராடூன்-மதுரை வாரம் இருமுறை விரைவு ரயில்,
 • புதுதில்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்,
 • புதுதில்லி-திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ்,
 • ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-சென்னை அந்தமான் விரைவு ரயில்,
 • புதுதில்லி-எா்ணாகுளம் மில்லினியம் விரைவு ரயில்,
 • ஹஷாத் நிஜாமுதீன்-சென்னை ராஜதானி விரைவு ரயில்,
 • ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா- திருநெல்வேலி நவயுக் எக்ஸ்பிரஸ்,
 • நிஜாமுதீன் - திருவனந்தபுரம் ஸ்வா்ணா ஜெயந்தி எக்ஸ்பிரஸ்,
 • நிஜாமுதீன்-கோயம்புத்தூா் கொங்கு எக்ஸ்பிரஸ்,
 • புது தில்லி-சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்

ஆகிய ரயில்களில் பயணம் செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த ரயில்களில் பயணம் செய்த அடையாளம் காணப்படாத பயணிகளின் விவரங்களை சேகரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியா்கள் மருத்துவா்களிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, பயண டிக்கெட் பரிசோதகா், ஆா்.பி.எஃப். ஒப்பந்த ஊழியா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனா். ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் எச்சரிக்கையாக உள்ளனா். 
"Many of those who attended the Delhi religious event travelled by trains between March 14 and 20. Most of the attendees travelled by 13 trains from Delhi to Telangana, Tamil Nadu and Kerala. Now that many of these attendees have tested positive for COVID-19, the Southern Railway has warned that ticket examiners and RPF personnel could also have been affected".